Published Date: August 8, 2025
CATEGORY: CONSTITUENCY

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், அதிக வருமானம் ஈட்டவும் மானிய நிதியுடன் ஆட்டோ வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் கீழ் பதிவு செய்துள்ள பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி மதுரை பெரியார் பஸ் நிலைய வணிக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன் குமார், தொழிலாளர் உதவி ஆணையர் பாரி ஆகியோர் கலந்துகொண்டு 9 பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோக்களை வழங்கினர். மேலும் அவர்களுக்கு இலவச சீருடையும் வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2023 முதல் தற்போது வரை 1126 பெண் ஓட்டுநர்கள் மானியம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 644 பேருக்கு ரூபாய் 6.44 கோடியில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
Media: Dinakaran